தமிழக மின் கட்டண உயர்வால் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு

தமிழக மின் கட்டண உயர்வால் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம் மூலம் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மின்சார ஒங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தவுடன் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கட்டண உயர்வு மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாகக் கூற வேண்டும் என்றால், ஆடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.1,07,208 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஆண்டு வாரியாக எதிர்பார்க்கப்படும் வருவாய்:

  • 2022-2023-ம் ஆண்டில் ரூ,12,093 கோடி
  • 2023-24-ம் ஆண்டில் ரூ.22,535 கோடி
  • 2024-25-ம் ஆண்டில் ரூ.23,634 கோடி
  • 2025-26ம் ஆண்டு ரூ.24,034 கோடி
  • 2026-27-ம் ஆண்டு ரூ.24,912 கோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in