Published : 02 May 2016 09:53 AM
Last Updated : 02 May 2016 09:53 AM

வைகோவை கொல்ல திமுக சதி: முத்தரசன் குற்றச்சாட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியது:

திருவாரூரில் நேற்று முன்தினம் 150-க்கும் மேற்பட்ட திமுகவினர் தடிகள், இரும்புக் கம்பிகளுடன் வைகோவின் பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மதிமுகவைச் சேர்ந்த மகேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதம்பி (எ) செல்வராஜ், துரை முகமது இசாத் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். வேனை நிறுத்தி வைகோ இறங் கியிருந்தால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பார். இது வைகோவைக் கொல்ல திமுக செய்த சதித் திட்டம்.

இந்த விவகாரத்தில் தொடர் புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

100 பேர் மீது வழக்கு

திருவாரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வைகோ நேற்று முன்தினம் வந்தார். அப்போது கருணாநிதியை ஜாதிப் பெயரை கூறி வைகோ விமர்சித்தாகக் கூறி, திமுகவினர் சிலர் கருப்புக் கொடி காட்டினர்.

இதைத்தொடர்ந்து, மக்கள் நலக் கூட்டணி கட்சியினர், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பேருந்து நிலையத்தில் கருணாநிதியின் படத்தை கொளுத்தி சாலை மறியல் செய்தனர்.

இந்நிலையில், வைகோ வுக்கு கருப்பு கொடி காட்டியதாக 100 பேர் மீதும் சாலை மறியலில் ஈடுபட்டதாக மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த 50 பேர் மீதும் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x