Published : 21 Jul 2022 07:29 AM
Last Updated : 21 Jul 2022 07:29 AM
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ளவெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்ற 30-க்கும் மேற்பட்டமாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சார் ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில்வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்ற சத்ய நந்தி என்ற மாணவி மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார். பிரியதர்ஷினி 6-ம் இடமும், பிரியா 7-ம் இடமும், அபிநயா8-ம் இடமும், சீஜா 9-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல இத்தேர்விலும் வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.
வெற்றி கல்வி மையத்தின் அடுத்தகட்ட நகர்வாக புதிய வகுப்புகள் நடைபெறவுள்ளன. குரூப்-1 தேர்வில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 நிலைகளுக்கும் ஓராண்டு பயிற்சி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இப்பயிற்சி வகுப்புகள் மையத்தின் சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி கிளைகளில் தொடங்கவுள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு தேவையான பாடக் குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுஆகியவற்றுக்கு தலா 50 தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு வெற்றிக்கான உத்திகள் கற்றுத்தரப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் சேரவிரும்புவோர் 9884421666, 9884432666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். அல்லது பெயர், செல்போன் எண்ணுடன் Group/PCM என டைப் செய்து 9884421666 என்றஎண்ணுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்-அப் அனுப்பலாம் என வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய இயக்குநர் மு.சண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT