Published : 12 May 2016 08:44 AM
Last Updated : 12 May 2016 08:44 AM

ஊழல் இருக்கும் வரை தமிழகம் வளராது: வேதாரண்யத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

ஊழல் இருக்கும் வரை தமிழகம் வளராது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் அருகே தேத்தாக்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய கனவுத் திட்டம் ஒன்று உள்ளது. நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டாக வரும் 2022-ம் ஆண்டில், நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமா னம் தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு உயர்ந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை நிறை வேற்ற மத்திய அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது.

தேசம் விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையில், இப்பகுதிக்கு வந்துள்ள முதல் பிரதமர் நான்தான் என்று இங்கே சொன்னார்கள். இந்தப் புண்ணி யப் பூமியைத் தரிசிக்க வந்ததது நான் செய்த புண்ணியமாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக, அதிமுக என்று மாறிமாறி வாக்களிக்கிறார்கள். இந்தக் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டை விடுதலை பெற வைக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். பாரதம் முழுவதும் பல மாநிலங்களில் பாஜக அரசு இருக்கிறது. அங்கெல்லாம் குறிக்கோள், மந்திரம் என்பதெல்லாம் வளர்ச்சி, வளர்ச்சி என்பது மட்டும்தான். விவசாய வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சாலை வசதி, மருத்துவமனை என வளர்ச்சிப் பாதையில் அம்மாநிலங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டு மக்களே உங்கள் வீடு, கடை, மருத்துவமனை, கல்விக்கூ டம் என்று எதிலாவது 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறதா? உங்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா? சுதந்தி ரமடைந்து இத்தனை ஆண்டு காலம் கழித்தும் இன்னும் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. தரமான சாலை வசதி இல்லை.

இந்நிலையை மாற்றி மாநிலத்தை வளர்ச்சி பெற வைக்க வேண்டும்.

எனது வாரணாசி தொகுதியில் மீனவர்களுக்கு இ-படகுகள் வாங்கிக் கொடுத்துள்ளோம். சூரிய சக்தி மூலம் இயங்கும் படகுகளால் அவர்களுக் கு நாள் ஒன்றுக்கு ரூ.500 மிச்சமாகிறது. இங்கு வந்து இறங்கியதும் 5 மீனவர்களை சந்தித்தேன். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் நின்றவர்கள் அவர்கள். அவர்களை இலங்கை அரசிடம் பேசி, தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி குடும்பத்தினருடன் சேர்த்தது மத்திய அரசு.

புயல், மழை வெள்ளம் வருகிற போதெல்லாம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சொல்ல முடியாத அளவு துயரமடைகிறார்கள். அவர்களின் துய ரத்தைப் போக்கிட நிரந்தரமான நடவடிக் கைகளையும், தேவையான நிவாரண நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முழுமையான பயிர் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப் பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

இதற்கு முந்தைய மத்திய அரசோ எதிலும் ஊழல், எங்கும் ஊழல் என்று செயல்பட்டு வந்தது. நிலக்கரி ஊழல், 2 ஜி ஊழல், 3 ஜி ஊழல் என்று ஊழல் செய்தவர்கள் இப்போது தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் இருக்கும் வரை தமிழகம் வளராது. ஊழல் உள்ள மாநிலம் வளர்ச்சி

பெற முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x