பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ்2 தேர்வு முடிவு நாளை (செவ் வாய்க்கிழமை) காலை 10.30 மணி யளவில் வெளியிடப்படுகிறது.

பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழ கம் மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்கள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாண விகள் என 8 லட்சத்து 39 ஆயி ரத்து 697 பேரும், தனித்தேர் வர்களாக 42 ஆயிரத்து 347 பேரும் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டை தொடர்ந்து மாணவர் களின் மதிப்பெண்களை பார்கோடு மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியும், மதிப்பெண் களை தொகுக்கும் பணியும் சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் மேற் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு மே 17-ம் தேதி அன்றும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 25-ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று கடந்த 6-ம் தேதி அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, பிளஸ்2 தேர்வு முடிவு நாளை (செவ் வாய்க்கிழமை) காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப் படுகிறது. தேர்வுத்துறை இயக்கு நர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந் தராதேவி தேர்வு முடிவுகளை யும், மாநில அளவில் ஒட்டு மொத்தமாகவும், பாடவாரியாக வும் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண் களுடன் கீழ்க்காணும் இணைய தள முகவரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களி லும் (National Informatics Centre-NIC), அனைத்து மத்திய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் ஏதும் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர் வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23-ம் தேதி நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in