வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரவண்குமார் ஜடாவத்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரவண்குமார் ஜடாவத்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என புதிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் ஜடாவத் தெரிவித்தார்.

சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழக வேளாண்துறையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்த ஸ்ரவண்குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட் டத்தின் 3-வது ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்களால், பல்வேறு தகவல் பரவுகின்றன. இக்கட்டான தருணத்தில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மாணவி உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனவே மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சென்றடையை முழுவீச்சில் பாடுபடுவேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in