

விக்கிபீடியாவில் 36-வது இடத்தி லிருந்த தமிழ் கட்டுரைகள் இப் போது 6-வது இடத்துக்கு ஒரே வருடத்தில் உயர்ந்துள்ளன என்று கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகமும், தமிழ் இணை யக் கல்விக் கழகமும், புது டெல்லி அறிவியல் தமிழ் இயக்க மும் இணைந்து நடத்தும் வேளாண் கலைக் களஞ்சிய 3 நாள் பயிலரங் கம் நேற்று பல்கலைக்கழக அரங் கில் தொடங்கியது. இதில், பல் கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி பேசியதாவது:
ஏற்கெனவே வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து வேளாண் பல்கலை.யின் அனைத்து உறுப்புக் கல்லூரி, இணைப்புக் கல்லூரிகளில் கணித் தமிழ் பேரவைகளை தொடங்கி யுள்ளோம்.
இதன் மூலம் வேளாண் அறிவி யலில் தமிழ் கட்டுரைகளை எழுத வும், தமிழ் வீக்கிபீடியாவில் பதி வேற்றம் செய்யவும் இளநிலை மாணவர்களை தயார்படுத்தியுள் ளோம். எங்களது மாணவர்கள் உழவர்களுக்கான இயற்கை மொழி ஆய்வு, வேளாண் அலை பேசி செயலி உருவாக்க பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து, ‘உரையை எழுத்தாக மாற்றுதல்’ ‘இயந்திர மொழிபெயர்ப்பு’, ‘உழ வர்களின் கேள்விகளுக்கு தமிழில் இயந்திர வழி பதில் சொல்லும் முறை’ உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் இணையக் கல்விக் கழகம், வேளாண் பல்கலைக் கழகம், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் சார்பில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வேளாண் கட்டுரைகளை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்துடன் இணைந்து 11,500 கட்டுரைகளும் உருவாக்கப்பட் டுள்ளன. இவை விரைவில் பதி வேற்றம் செய்யப்படும் என்றார்.
சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகம், கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப் பாளர் மா.தமிழ்பரிதி பேசும்போது, ‘‘விக்கிபீடியாவில் 36-வது இடத்திலிருந்த தமிழ் கட்டுரைகள் இப்போது 6-வது இடத்துக்கு ஒரே வருடத்தில் உயர்ந்துள்ளன. எதிர்காலத்தில் இணையத்தில் தமிழின் நிலை, முதல் இடத்துக்கு உயர வேண்டும்” என்றார்.
வேளாண் அறிவியல் தமிழ் இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் மு.முத்தமிழ்ச்செல்வன், வேளாண் பல்கலை. முதல்வர் ச.மகிமை ராஜா ஆகியோர் பேசினர்.