விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (19-ம் தேதி) இரவு சுமார் 9.45 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (வயது 45), வெங்கடேஷ் (வயது 44) மற்றும் சுப்பிரமணி (வயது 40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in