Published : 20 Jul 2022 03:31 PM
Last Updated : 20 Jul 2022 03:31 PM
சென்னை: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.
இது குறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000-ல் இருந்து ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
அடுத்தபடியாக,கிராம சபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது, அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது" என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT