

அதிமுக தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று சந்தித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம் மேளனத்தின் தலைவர் ஜி.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டப்பேர வைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இதேபோல, திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், 24 மனை தெலுங்கு செட்டியார் மற்றும் அனைத்து செட்டியார்கள் பேரவை யின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம், ஸ்ரீ குஜராதி சமாஜ் அமைப்பு நிர்வாகிகளும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.