Published : 17 May 2016 09:09 AM
Last Updated : 17 May 2016 09:09 AM

25 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் இல்லை: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட் பாளர் மா.சுப்பிரமணியன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவை பார்வையிட்ட பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறேன். 25 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தாமல் உள்ளனர். சில வாக்குச்சாவடிகளில் போதிய அளவில் இடவசதி இல்லாமல் நெருக்கடியாக இருக்கிறது. ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பதால் அனைத்து இன்னல்களையும் தாண்டி மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x