கனியாமூர் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் 5 பேர் கைது

கனியாமூர் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் 5 பேர் கைது
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி (17) சந்தேகமாக உயிரிழந்தது தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் அவரது தாயார் ஸ்ரீமதி அளித்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கலவரத்தைத் தொடர்ந்து சின்னசேலம் வட்டத்துக்குப்பட்ட 2 குறுவட்டங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த தடை வரும் 31-ம் தேதி வரை நீடிக்கும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in