

திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி:
கடந்த 5 ஆண்டுகளில் ஜெய லலிதா புதிதாக எந்த திட்டங் களையும் மேற்கொள்ளவில்லை. சென்னை வெளிவட்டச் சாலை, சேலம் நகரம், சென்னை - போரூர், சென்னை- வேளச்சேரி மேம்பாலங்கள், துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை உள்ளிட்ட ஏராளமான மேம் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை கள் என ரூ.11,000 கோடி மதிப் பிலான மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்களை செயல் படுத்தாமல் ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார்.
சட்டப்பேரவையில் 110 விதி யின் கீழ் வெளியிட்ட 42 அறிவிப்புகளில் 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத் தில் கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து இடங் களிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு களில் நடைபெற்ற பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனங்கள் பணம் பெற்றுக் கொண்டு நடைபெற்றுள்ளது என நான் தெரிவித்ததற்கு என் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது துணைவேந்தர்களை அழைத்து குறுக்கு விசாரணை நடத்துவேன்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை உள்ளூர் போலீ ஸார், தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும். ராணுவத்தால் தடுக்க முடியாது. பணம் மட்டுமே தேர்தல் முடிவு களை மாற்றிவிடாது. பணத்தை வாங்கிக்கொண்டாலும், ஜெய லலிதாவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
பின்னர், காமராஜர் ஆட்சி கனவாகவே தொடர்கிறதா என கேட்டதற்கு, ‘யார் நல்ல ஆட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான். கருணாநிதி அந்த ஆட்சியைத் தருவார்’ என்றார் இளங்கோவன்.