சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்: மக்களுக்கு போலீஸார் அறிவுரை

சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்: மக்களுக்கு போலீஸார் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: சென்னை பெருநகரில் குற்றச்செயல்களைத் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அடுக்குமாடிக் குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என 86 இடங்களில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் போலீஸார் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இதேபோல, 115 குடிசைப் பகுதிகளிலும் கலந்தாய்வு நடை பெற்றது.

அப்போது, பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு போலீஸார் அறிவுரைகள்மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். சந்தேக நபர்களின்நடமாட்டம் இருந்தால் உடனேகாவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

தேவைக்குத் தகுந்தாற்போல, காவல் துறை உதவிஎண் 100, பெண்கள் உதவிமையம் எண் 1091, முதியோர் உதவி மையம் எண் 1253, குழந்தைகள் உதவி மையம் எண்1098 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனபோலீஸார் அறிவுரை வழங்கினர். இந்தக் கலந்தாய்வில் 6,512 பேர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in