Published : 02 May 2016 09:37 AM
Last Updated : 02 May 2016 09:37 AM

கோடை விடுமுறை முடிந்த பிறகு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் அமர்வு: உயர் நீதிமன்றம் பட்டியல் வெளியிட்டது

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1 முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் அமர்வுப்பட்டியலை உயர் நீதிமன்றம் வெளியிட் டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வு சினிமா, தாது, கூட்டுறவு, வனம் மற்றும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் ரிட் மேல்முறையீடு, பொதுநல வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிப்பர்.

மேல்முறையீட்டு மனுக்கள்

நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளீதரன் ஆகியோர் நில ஆர்ஜிதம் தொடர் பான மேல்முறையீட்டு வழக்கு களையும், நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, டி.மதிவாணன் ஆகியோர் 2014 முதல் தாக்க லான ரிட் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிப்பர்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் வரி, கலால் மற்றும் வணிகவரித்துறை மேல்முறையீட்டு வழக்குகளை யும், நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் இரண் டாவது மேல்முறையீட்டு வழக்கு களையும், தீர்ப்பாய மேல்முறை யீட்டு வழக்குகளையும் விசாரிப் பர். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் ஆட் கொணர்வு வழக்குகள், குற்ற வியல் மேல்முறையீடு தொடர் பான வழக்குகளை விசாரிப்பர்.

நீதிபதி எஸ்.பழனிவேலு ரிட் வழக்குகளையும், நீதிபதி எம்.வேணுகோபால் குற்றவியல், போதைப்பொருள், சிபிஐ தொடர் பான வழக்குகளையும், நீதிபதி ஆர்.சுப்பையா இரண்டாவது மேல்முறையீட்டு வழக்குகளை யும், நீதிபதி ராஜிவ் ஷக்தேர் கம்பெனி மேல்முறையீடு, சமரச தீ்ர்வு வழக்குகளையும் விசாரிப்பர்.

நீதிபதி எம்.சத்யநாராயணன் கல்வி தொடர்பான வழக்குகளை யும், நீதிபதி பி.ராஜேந்திரன் அரசுப்பணி தொடர்பான வழக்கு களையும், நீதிபதி சி.டி.செல்வம் உரிமையியல் சீராய்வு மனு வழக்குகளையும் விசாரிப்பர்.

நீதிபதி என்.கிருபாகரன் தொழி லாளர், மின்வாரியம், நில ஆர்ஜித வழக்குகளையும், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை வழக்குகளையும், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் வரி, மோட்டார், கலால் வழக்குகளையும், நீதிபதி எம்.துரைசுவாமி உரிமையியல் சீராய்வு வழக்குகளையும், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இரண்டாவது மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதிவிசாரணை வழக்குகளையும் விசாரிப்பர்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் குற்றவியல் வழக்குகளையும், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உரிமையியல் வழக்குகளையும், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளையும், நீதிபதி ஜி.சொக்கலிங்கம் குற்றவியல் சீராய்வு வழக்குகளையும் விசாரிப்பர்.

இதேபோல் மதுரை கிளை யில் நீதிபதிகள் எம்.ஜெய் சந்திரன், பி.கோகுல்தாஸ் ஆகி யோர் உரிமையியல், குற்ற வியல், நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை யும், நீதிபதிகள் என்.ராம மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் ரிட் மேல்முறையீடு, ஆட்கொணர்வு வழக்குகளையும், நீதிபதி கே.கே.சசிதரன் கல்வி, வனம் தொடர்பான வழக்குகளை யும், நீதிபதி டி.ராஜா தொழி லாளர், அரசுப்பணி, கூட்டுறவு, மின்வாரியம் தொடர்பான வழக்குகளையும் விசாரிப்பர்.

முன்ஜாமீன் வழக்குகள்

நீதிபதி ஆர்.மாலா இரண்டா வது மேல்முறையீட்டு வழக்கு களையும், நீதிபதி பி.தேவதாஸ் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளையும், நீதிபதி எஸ்.விமலா குற்றவியல் பிரதான வழக்குகளையும், நீதிபதி கே.கல் யாணசுந்தரம் உரிமையியல் சீராய்வு வழக்குகளையும், நீதிபதி வி.எம்.வேலுமணி ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகளையும் விசாரிப்பர் என உயர் நீதிமன்றம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x