

தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது என கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறினார்.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத் தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசும்போது, “ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவை அகற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகின்றன.
ஆட்சி பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்ததுதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை. திமுக ஆட்சியில் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஏழை, ஏளிய மாணவர்கள், சிறுபான்மை மாணவர்கள் வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டன.
அதனை ஜெயலலிதா முடக்க நினைத்த காரணத்தால்தான், பள்ளிகள் திறப்பதில் 3 மாதங்கள் தள்ளிப்போனது.
தனியார் பள்ளிகளை ஊக்குவித்து 2 ஆயிரம் அரசுப் பள்ளிகளை ஜெயலலிதா மூடியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டால் சிறு குறு தொழில்கள் முடங்கின.
அதனால், வெளி மாநிலங் களுக்கு வேலைத்தேடி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது” என்றார்.