Published : 05 May 2016 09:50 AM
Last Updated : 05 May 2016 09:50 AM

திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு

தமிழகம் வளர்ச்சி காணாமல், ஊழல் மலிந்து காணப்படுகிறது, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் நேற்று நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் களை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது:

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசு வேண்டுமா அல்லது அதிமுக, திமுக போன்ற ஊழல் அரசுகள் வேண்டுமா என்பதை வாக்காளர்கள் சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, திமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. ‘அ’ என்ற ஒரு எழுத்தைத் தவிர. மற்றபடி, இருவரும் தமிழகத்தை போட்டி போட்டுச் சுரண்டியவர்கள்.

மத்தியில், 2014-ல் நடை பெற்ற தேர்தலில், 30 ஆண்டுக ளாக இந்த நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் தூக்கி யெறியப்பட்டு, மோடி தலைமை யிலான அரசு அமைந்தது. அது போன்ற தொடக்கம், தமிழகத் திலும் ஏற்பட வேண்டும். மீண்டும், மீண்டும் திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காமல், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். இங்கேயும் ஒரு மாற்றத்தை தொடங்கலாம்.

திமுக மீது 2ஜி, ஏர்செல்- மேக்சிஸ் போன்ற பல்வேறு ஊழல் கள் உள்ளன. காங்கிரஸ் பற்றி சொல்லவே வேண்டாம். ஊழலின் ஊற்றுக்கண் அது. அதிமுகவின் தலைவியோ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். இவர்களுக்கு ஊழலைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

நாடு முழுவதும் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் வித்தியாசமாக, குழந்தைகள் அருந்தும் பால் கொள்முதலிலும் கலப்படம் செய்து ஊழல் நடந்துள்ளது. இது, வருந்தத்தக்கது. ஆற்று மணலில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடியை அதிமுக அரசு கொள்ளையடித்துள்ளது. மோடி ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, துன்புறுத்தல் போன்றவை நடைபெறுவதில்லை.

சென்னையில் வெள்ளம் ஏற் பட்டபோது, மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரணமாக வழங்கினார். ஆனால், அந்த நிதியை மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்தாமலும், ‘அம்மா’ பெயரில் அனைவருக்கும் தலா ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசு, தமிழகத்துக் காக மத்திய அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிரா கரித்தும், செயல்படுத்தாமலும் கிடப்பில் போட்டுள்ளது. இத னால், தமிழகம் வளர்ச்சி காணா மல் ஊழல் மலிந்து காணப்படு கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். அதைத்தொடர்ந்து நாகர் கோவில், தென்காசி, மதுரை யிலும் அமித்ஷா பிரச்சாரம் செய்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x