சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கள்ளக்குறிச்சி காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கள்ளக்குறிச்சி காவல்துறை எச்சரிக்கை

Published on

கள்ளக்குறிச்சி: சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது: ''கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்பந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.

இது சம்பந்தமாக விசாரணை செய்தபோது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிகணினியை திருட முயற்ச்சி செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ என்று தெரியவருகிறது.

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய் செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற சட்டம் ஒருங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in