

தென்மேற்கு பருவ மழை கேரளா வில் நாளை (6-ம் தேதி) தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத னால், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் மழை மறைவு பகுதியாக தமிழகம் உள்ளது. எனவே, தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்துக்கு அதிக பயன் கிடைக்காது. என்றா லும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் குறிப்பாக கோவை, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, ஜூன் 6-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. தமிழகத்துக்கு மழை கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 4 செ.மீ, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.2 டிகிரி பதிவாகியது. திருச்சியில் 101.84, சென்னையில் 101. 48, சேலத்தில் 96.8 டிகிரி பதிவாகியுள்ளது.