Published : 28 May 2016 09:24 AM
Last Updated : 28 May 2016 09:24 AM

சமூக சேவை செய்யும் இளைஞர்கள் முதல்வர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

சமூக சேவை செய்யும் இளைஞர்கள், முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் உறுப்பினர் - செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுதந்திர தின விழாவில்...

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையி லான ‘முதல்வர் இளைஞர் விருது’ வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சமுதாய நலனுக்கு தொண்டாற்றியிருக்க வேண்டும். அரசு பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விருதுக்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகங்களி லும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் இணைய தளத்திலும் (www.sdat.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்திசெய்யப்பட்ட விண் ணப்பங்களை விண்ணப்பதாரர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவ லகத்தில் 20-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலான ‘முதல்வர் இளைஞர் விருது’ வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x