

திருத்தணியில் உள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில், மூலவரான சுப்ரமணியசுவாமி சன்னிதியை சுற்றியுள்ள உள் பிரகாரப் பகுதியில் நேற்று முன் தினம் மாலை 2 மாத ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இதனை அறிந்த கோயில் நிர்வாகத்தினர், கோயில் வளாகத்தில் அறிவிப்புகள் செய்தும் யாரும் குழந்தையை எடுக்க வரவில்லை. இதையடுத்து, அக்குழந்தை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு உரிய சிகிச்சைகளோடு பாதுகாக்கப்பட்ட அக்குழந்தை நேற்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி குழந்தையின் மறுவாழ்வுக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.எஸ். சையத் ரவூப்பிடம் குழந்தையை ஒப்படைத்தார். பின்னர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே குழந்தையின் பெற்றோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.