மிடாஸ் ஆலையை மூட ஜெயலலிதா முன்வருவாரா?- பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தும் என அறிவித்துள்ள ஜெயலலிதா, மிடாஸ் ஆலையை மூட முன்வருவாரா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.வாசுவை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று பேசும்போது, ‘‘தமிழகத்தில் அதிமுக, திமுகவால் மது விலக்கை அமல்படுத்த முடி யாது. தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள் ளார். அதற்கு முன்பு மிடாஸ் ஆலையை மூட ஜெயலலிதா முன்வருவாரா?
அதிமுக, திமுகவினர் தங்க ளுக்குச் சொந்தமான மதுபான ஆலைகளை மூட வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றுபவர் கள் இப்போதே மக்கள் முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள். டாஸ்மாக் மதுவினால் தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்களின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது ’’ என்றார்.
