காவேரிப்பட்டணத்தில் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

காவேரிப்பட்டணத்தில் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மணிகண்டன்(23). இவர், நேற்று முன்தினம் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட் களை வாங்க காரில் பெங்களூரு வுக்கு சென்றார். காரை, விருதுநகர் சிவந்திநகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36) ஓட்டிச் சென்றார்.

பெங்களூருவில் பொருட்களை வாங்கி லாரியில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பொருட்களை வீட்டில் பொருத்துவதற்காக, கடை ஊழியரான பெங்களூரு அருகே உள்ள யாடியூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்(32) என்பவரை உடன் அழைத்துக்கொண்டு மணிகண்டன் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட் டணம் அருகே உள்ள சந்தாபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, சாலை யோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், படுகாயமடைந்த மணிகண்டன், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தரும புரி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட ஓட்டுநர் வேல்முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in