Published : 17 Jul 2022 05:24 AM
Last Updated : 17 Jul 2022 05:24 AM

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

உதகை: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்தமாக 6,220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய உதகை வந்த அவர், மின் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அதில், நீலகிரிக்கு 800 மின் கம்பங்கள் வழங்கப்படும். அதற்கான உதிரிபாகங்கள் தயாராக இருக்கின்றன. தமிழகத்தில் 11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே 143 டாலருக்கு நிலக்கரி வாங்கப்படுகிறது.

ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், மாதந்தோறும் மின் அளவீடு செய்வதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், மாதந்தோறும் மின்அளவீடு முறை நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் சொந்தமாக மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சில்லல்லா நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x