Last Updated : 07 May, 2016 04:56 PM

 

Published : 07 May 2016 04:56 PM
Last Updated : 07 May 2016 04:56 PM

ஸ்ரீவைகுண்டத்தில் மும்முனை போட்டி: கரை சேர்வாரா அமைச்சர் சண்முகநாதன்?

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மும்முனை போட்டி நிலவும் நிலையில், அமைச்சர் சண்முகநாதன் மீண்டும் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏ.பி.சி.வீரபாகு, சி.பா.ஆதித்தனார் போன்ற தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதி ஸ்ரீவைகு ண்டம். இத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மீண்டும் போட்டி யிடுகிறார். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி தொடங்கப் பட்டது, ஸ்ரீவைகுண்டம், ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைத்தது, கருங்குளம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது என, சண்முகநாதன் திட்டங்களை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேநேரத்தில் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த சண்முகநாதன், பிரதான தொழிலான விவசாயத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிரான அம்சமாக பார்க்கப் படுகிறது.

காங்கிரஸில் அதிருப்தி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவரை பொறுத்தவரை திமுக கூட்டணி என்பது மட்டுமே பலமாக உள்ளது. இவரை வேட்பாளராக அறிவித்த உடனே காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். அந்த போராட்டங்கள் அடங்கிவிட்டாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தமாகா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜய சீலன் போட்டியிடு கிறார். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுக மானவர். மண்ணின் மைந்தர், பலமான கூட்டணி போன்றவை அவருக்கு வலுசேர்க்கின்றன. அதேநேரத்தில் தமாகாவின் சின்னம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடையாதது விஜயசீலனுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

வெற்றிக் கனி யாருக்கு?

இதேபோன்று பாஜக சார்பில் சௌ.செல்வராஜ், பாமக சார்பில் கோ.லிங்கராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் பே.சுப்பையா பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் க.முத்துராமலிங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சி.தேவப்பிரியன் ஆகியோர் தங்கள் பங்குக்கு குறிப்பிட்ட வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

களத்தில் 21 பேர் இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ், தமாகா வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த மும்முனைப்போட்டியில் யார் வெற்றிக் கனியை பறிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x