

புதுச்சேரியின் வளர்ச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொறுக்கவில்லை என்று தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ‘புதுச்சேரியிலிருந்து 2 மது பாட்டில்களைக்கூட தமிழ கத்துக்குள் அனுமதிப்பதில்லை’ என குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மது பாட்டில்களை கொண்டுவருவதால் தமிழக அரசுக்குத்தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
புதுச்சேரியிலிருந்து தமிழகத் துக்கு மது வருவதால் தமிழகத் துக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே, மரக்காணம், திருவெண்காடு, கங்கராம்பாளை யம், ராதாபுரம், கன்னியக்கோயில் ஆகிய இடங்களில் தமிழக அரசு செக் போஸ்ட்களை வைத்து சோதனை செய்கிறது. இந்த சோதனையின்போது நாளொன்றுக்கு குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 ஆயிரம் மதிப்பில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தேர்தல் நேரத்தில் புதுச் சேரியிலிருந்து மதுக்கடத்தலை தடுக்க இரு மாநில கலால் துறை யும் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் நடத்திய ஆலோசனைக்கூட் டத்தின்படி, மதுக்கடத்தலை தடுக்க விழுப்புரம் மாவட்ட எல்லை யில் 21 இடங்களிலும், கடலூர் மாவட்ட எல்லையில் 4 இடங்களி லும் சோதனைச் சாவடிகளை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, புதுச் சேரியின் மது விற்பனையால் தமிழக அரசுக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.