Published : 28 May 2016 09:41 AM
Last Updated : 28 May 2016 09:41 AM

எம்எல்ஏவாக இல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்கக் கூடாது: புதுச்சேரி பாமக எதிர்ப்பு

புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அமைய உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் ‘முதல்வர் யார்?’ என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. இப்பதவியை பெறுவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். தொடக்கம் முதலே பாமக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர் பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2001-ம் ஆண்டு புதுச்சேரி முதல்வராக சட்டப்பேரவை உறுப் பினர் இல்லாதவர் (மறைந்த முன் னாள் முதல்வர் சண்முகம்) நியமிக் கப்பட்டார். அப்போது அவரால் 6 மாதங்களில் எம்எல்ஏவாக முடியவில்லை. இதனால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் எம்எல்ஏவாக இல்லாத ஒருவர் (நாராயணசாமி) புதுச்சேரியில் முதல்வர் ஆக முயற்சிக்கிறார். அவர் முதல்வரானால் எம்எல்ஏ ஆக வேண்டும் என கட்டாயம் உள்ளதால் தற்போது உள்ள எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு, அந்த தொகுதியில் இடைத்தேர்தலில் நிற்பார். அப்போது தோல்வி அடைந்தால் முதல்வர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் 2001-ல் நடைபெற்ற களங்கம் மீண்டும் புதுச்சேரிக்கு ஏற்படும்.

இடைத்தேர்தல் நடைபெற்றால் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும் செலவுகள், போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் ஏற்படும் செலவுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் அரசுக்கு ஏற்படும் செலவுகளுக்கு இந்த இடைத்தேர்தல் நடைபெற காரண மானவர்களிடம் இருந்து பணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் சட்டபேரவை உறுப்பின ராக இல்லாத ஒருவரை புதுச் சேரி முதல்வராக நியமிக்க அனு மதிக்க கூடாது என்று துணைநிலை ஆளுநர், மத்திய உள்துறை செய லாளர், தேர்தல் ஆணையர் ஆகியோ ருக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் மேலி டப் பார்வையாளர்கள் இன்று புதுச் சேரிக்கு வர இருக்கின்றனர். புதிய முதல்வரை இன்று அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் நாராயணசாமியின் பெயரே பிரதானமாக அடிபடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x