கல்லூரி நுழைவுவாயிலில் பாஜக பிரச்சாரம்: திருப்பூர் போலீஸில் நிர்வாகம் புகார்

கல்லூரி நுழைவுவாயிலில் பாஜக பிரச்சாரம்: திருப்பூர் போலீஸில் நிர்வாகம் புகார்
Updated on
1 min read

திருப்பூர்: பல்லடம் அருகே கரையாம்புதூரில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8-ம் ஆண்டு சாதனை விளக்க தாமரை மாநாடு நாளை (ஜூலை 17) நடைபெற உள்ளது.

இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். நிகழ்வின் ஒருபகுதியாக, ‘செல்ஃபி வித் அண்ணா’ போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி அரசு கல்லூரி உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெறுவதாக அக்கட்சியினர் அறிவித்திருந்தனர்.

எல்.ஆர்.ஜி கல்லூரி நுழைவுவாயில் கதவை ஒட்டிய பகுதியில் பாஜகவை சேர்ந்த பெண்கள் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினர். இதனால், கல்லூரி நிர்வாகத்தினர், முன்பக்க கதவை திறக்காமல், பின் வழியாக மாணவிகளை வெளியே அனுப்பினார். இதையடுத்து அங்கு வந்த வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கல்லூரிக்குள் நுழைந்து, பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அடைக்கப்பட்டிருந்த கல்லூரியின் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in