

சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர். 1,166 மதிப்பெண் கள் பெற்று, மீனவர் மகள் ப.ஸ்வப்னா முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின் றன. இதில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர் வில் 2 ஆயிரத்து 211 மாணவர்கள், 3 ஆயிரத்து 648 மாணவிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 859 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மொத் தம் 5 ஆயிரத்து 534 பேர் வெற்றி பெற்றனர். முதல் 3 இடங்களை 6 மாணவிகள் கைப்பற்றினர். இவர்கள் 6 பேரும் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்து படித் திருப்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஸ்வப்னா முதலிடம்
எர்ணாவூரைச் சேர்ந்த மீனவர் ஆர்.பரமசிவம் மகள் ப.ஸ்வப்னா. இவர் கொருக்குப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வணிகவியல் பாடப் பிரிவில் படித்து வந்தார். இவர், பிளஸ் 2 தேர்வில் 1,166 மதிப்பெண் கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
எனது ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தியதாலும், பல் வேறு தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சி களில் பங்கேற்றதாலும், இந்த மதிப்பெண்ணை பெற முடிந்தது. எனது பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பாசிரியை ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்தும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற முடியும் என்று என்னை ஊக்கப் படுத்தினர். அதன் மூலம் நான் மேற் கொண்ட முயற்சியில் மாநகராட்சி அளவில் முதலிடம் பிடிக்க முடிந் தது.
வெள்ள பாதிப்புக்கு பின் அரசு வழங்கிய குறைந்தபட்ச கற்றல் சிறப்பு கையேடு பயனுள்ளதாக இருந்தது. வெள்ள பாதிப்பு ஏற் பட்டபோது, ஒரு மாதம் வீட்டில் மின்சாரம் இல்லை. பள்ளிக்கும் விடுமுறைவிடப்பட்டது. அப்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து தான் இந்த மதிப்பெண்ணை பெற்று இருக்கிறேன். இதற்காக தனி வகுப்பு எதற்கும் செல்ல வில்லை. முழுக்க முழுக்க பள்ளி யின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியால்தான் அதிக மதிப்பெண் பெற்றேன். அடுத்ததாக சிஏ படிக்க விரும்புகிறேன் என்றார்.
2-ம் இடத்தில் 2 மாணவிகள்
சிஐடி.நகர் சென்னை மேல் நிலைப் பள்ளி வணிகவியல் பாடப் பிரிவு மாணவி ஜி.புவனேஸ்வரி, மடுவன்கரை மேல்நிலைப் பள்ளி வணிகவியல் மாணவி எம்.ராம லக்ஷ்மி ஆகியோர் தலா 1,157 மதிப் பெண்கள் பெற்று, மாநகராட்சி அளவில் 2-ம் இடம் பிடித்தனர். மாணவி புவனேஸ்வரி கூறும்போது, “எனது தாய் தையல் தொழில் செய்து வருகிறார்.
அவர் அளித்த ஊக்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் அதிக மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்திருக் கிறேன். அடுத்ததாக பி.காம். படிக்க விரும்புகிறேன்” என்றார்.
கூலித் தொழிலாளி மகள் ராம லக்ஷ்மி கூறும்போது, “எனது வகுப் பாசிரியர்கள் அனைவரும், புத்த கத்தை மட்டுமே படிக்குமாறு அறி வுரை வழங்கினர். அதனாலேயே அதிக மதிப்பெண் பெற முடிந்தது. அடுத்ததாக சிஏ படிக்க விரும்பு கிறேன்” என்றார்.
3-ம் இடத்தில் 3 மாணவிகள்
சைதாப்பேட்டை பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி ஆர்.தரணி (கார் ஓட்டுநர் மகள்), கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜோதிபிரியா (தனியார் செக்யூ ரிட்டி மகள்), புல்லா அவென்யூ மேல்நிலைப் பள்ளி மாணவி சி.சஞ்சனா (வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகள்) ஆகியோர் தலா 1,155 மதிப்பெண்கள் பெற்று, மாநகராட்சி அளவில் 3-ம் இடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும் சிஏ படிக்க விரும்புவதாக தெரிவித் தனர்.
இம்மாணவிகள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் பி.சந்தர மோகனை, ரிப்பன் மாளிகையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.