Published : 19 May 2016 01:56 PM
Last Updated : 19 May 2016 01:56 PM

சென்னையில் 16-ல் 11 தொகுதிகளில் அதிமுக பின்னடைவு

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 11 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி அதிமுக 122 தொகுதிகளிலும் திமுக 94 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதியம் 1.30 மணி நிலவரப்படி சென்னையில் 16 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலை வகிக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 27484 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 16964 வாக்குகள் பெற்றுள்ளார்.

மைலாப்பூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர்.நட்ராஜ் 11778 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கராத்தே எஸ்.தியாகராஜன் 9067 வாக்குகள் பெற்றுள்ளார்.

விருகம்பாகக்ம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி 19365 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கே.தனசேகரன் 18310 வாக்குகள் பெற்றுள்ளார்.

தியாகராய நகரில், அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 20507 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.கனிமொழி 20314 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் 17434 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அம்னோகர் 13374 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த தொகுதிகள் தவிர மற்ற 11 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x