Published : 04 May 2016 09:00 AM
Last Updated : 04 May 2016 09:00 AM

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பொன்முடி மீதான செம்மன் குவாரி முறைகேடு வழக்கின் விசாரணையை ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. .

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2012-ம் ஆண்டு, வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி நடத்தியதில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக வும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 37 லட்சம் இழப்பு ஏற் படுத்தியதாக, பொன்முடி, அவ ருடைய மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள் ளிட்ட 8 பேர் மீது, வானூர் வட்டாட் சியர் குமாரபாலன் புகார் அளித்தார்.

இது குறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, தற் போது குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுமென்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

மீண்டும் நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் ஜெயச்சந்திரன், சதானந்தன், கோதகுமார், கோபிநாத், கெளதம சிகாமணி, ராஜமகேந்திரன், லோகநாதன் ஆகியோர் ஆஜராகினர். பொன்முடி ஆஜராகவில்லை. இதனை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x