ஐஐடி முதல் மாநிலக் கல்லூரி வரை: தேசிய தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் வகிக்கும் தமிழகக் கல்லூரிகள்

ஐஐடி முதல் மாநிலக் கல்லூரி வரை: தேசிய தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் வகிக்கும் தமிழகக் கல்லூரிகள்
Updated on
1 min read

சென்னை: கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.

ஒட்டு மொத்த தரவரிசை

  • முதல் இடம் - ஐஐடி சென்னை
  • 16வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , கோவை
  • 18வது இடம் - விஐடி, வேலூர்

பல்கலைக்கழகம்

  • 5வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை
  • 9வது இடம் - விஐடி, வேலூர்
  • 15வது இடம் - பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

கல்லூரிகள்

  • 3வது இடம் - மாநிலக் கல்லூரி, சென்னை
  • 4வது இடம் - லயோலா கல்லூரி, சென்னை
  • 6வது இடம் - பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, கோவை

ஆராய்ச்சி நிறுவனங்கள்

  • 2வது இடம் - ஐஐடி, சென்னை
  • 10வது இடம் - விஐடி, வேலூர்
  • 21வது இடம் - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் கல்லூரிகள்

  • முதல் இடம் - ஐஐடி சென்னை
  • 8வது இடம் - என்ஐடி திருச்சி
  • 12வது இடம் - விஐடி வேலூர்
  • 19 வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மேலாண்மை கல்லூரிகள்

  • 10வது இடம் - ஐஐடி சென்னை
  • 18வது இடம் - என்ஐடி திருச்சி
  • 27வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

பார்மஸி கல்லூரிகள்

  • 6வது இடம் - ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி
  • 12வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை
  • 14வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மருத்துவக் கல்லூரிகள்

  • 3வது இடம் - கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர்
  • 8வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கோவை
  • 12வது இடம் - சென்னை மருத்துவ கல்லூரி சென்னை

பல் மருத்துவக் கல்லூரிகள்

  • முதல் இடம் - சவீதா கல்லூரி சென்னை
  • 8வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை
  • 13வது இடம் - ராமசந்திர கல்லூரி சென்னை

கட்டிடக் கலைக் கல்லூரிகள்

  • 5வது இடம் - என்ஐடி திருச்சி
  • 11வது இடம் - எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை
  • 23வது இடம் - தியாகராஜர் கல்லூரி மதுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in