ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து: ஜெயக்குமார்

ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து: ஜெயக்குமார்
Updated on
1 min read

சென்னை: "ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுவதை கேலிக்கூத்தான விஷயமாகத்தான் பார்க்கமுடியும்" என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு அதிமுக சார்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது: "ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் யாரும் இல்லாத சூழ்நிலையில் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டை குறிப்பிட்டு எங்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்குவதற்கு உண்டான அதிகாரம் அனைத்தும் எங்களுக்குத்தான் இருக்கிறது. ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவதை கேலிக்கூத்தான விஷயமாகத்தான் பார்க்கமுடியும். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை அதிமுக கட்சியிலேயே இல்லை. அவர் எந்தக் கட்சிக்கு போனாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in