

சென்னை: சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி காதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.