Published : 15 Jul 2022 06:09 AM
Last Updated : 15 Jul 2022 06:09 AM

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவி புஷ்பா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: திரைப்படக் கலைஞர் ஐசரி வேலனின் மனைவியும், கல்வியாளர் ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் காலமானார். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமா நடிகரும், முன்னாள் அமைச்சருமான ஐசரி வேலனின் மனைவியும், கல்வியாளர் ஐசரி கே.கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் (75) வயது முதிர்வு காரணமாக நேற்று காலை காலமானார்.

இவரது உடல் கிழக்கு கடற்கரைச் சாலை பாரதி அவென்யூவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 15) காலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

முன்னதாக, இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: திரைப்படக் கலைஞரும், முன்னாள்எம்எல்ஏவுமான மறைந்த ஐசரி வேலன் துணைவியாரும், கல்வியாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தாயாரை இழந்து வாடும் ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி.: எம்ஜிஆருடன் நடித்தவரும், அவரது அமைச்சரவையில் பணியாற்றியவருமான ஐசரி வேலனின் துணைவியாரும், ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன்மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரியவரான ஐசரி வேலன் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பாஐசரி வேலன் மறைந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, உதயா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x