Published : 23 May 2016 09:49 AM
Last Updated : 23 May 2016 09:49 AM

தமிழக அமைச்சரவையில் திருவண்ணாமலை மாவட்டம் புறக்கணிப்பு: வாக்கு வங்கி சரிவு காரணமா?

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் திருவண்ணா மலை மாவட்டம் புறக்கணிக்கப்பட் டுள்ளது.

ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவையில் திருவண் ணாமலை மாவட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளது. அமைச்சரவை பட்டிய லில் ஒருவருக்குக் கூட இடம் அளிக்கவில்லை.

கடந்த 2011-16 அமைச்சரவை யில் தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்ரமணியன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், தற்போது பதவி ஏற்க வுள்ள புதிய அமைச்சரவையில் தி.மலை மாவட்டத்துக்கு இடம் அளிக்காதது அதிமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேர வைத் தொகுதிகளில் 3 தொகுதிக ளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. இதற்கு கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பூசலே காரணம்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எம்எல்ஏ மற்றும் முக்கிய நிர்வாகி கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத தால் தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர். செயல் படாத எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பதவிகளில் இருந்தவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் தோல்விக்கு காரணம்.

செய்யாறு மற்றும் கலசப்பாக்கத் தில் திமுக போட்டியிடாமல் காங் கிரசுக்கு ஒதுக்கியது. அந்த தொகுதி களில் திமுக களம் இறங்கி இருந் தால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கும். ஆரணியில் தேமுதிக எம்எல்ஏ மீது இருந்த அதிருப்தியால், அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மையான வெற்றி கிடைக்காதது, வாக்கு வங்கி சரிவு போன்ற காரணங்களும், அமைச்சரவையில் இடம் கிடைக் காமல் போனதற்கு காரணமாகிவிட் டது. மேலும், தேர்வு செய்யப்பட் டுள்ள 3 எம்எல்ஏக்களும் புதியவர் கள் என்பதால், அமைச்சர் பதவி வழங்காமல் இருக்கலாம்.

அவர்களது செயல்பாடுகளை பொறுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்போது வாய்ப்பு கிடைக்கலாம். மாவட்டம் தொடங் கிய பிறகு கடந்த 1996-ல் இருந்து திமுக, அதிமுக அமைச்சரவையில் தி.மலை மாவட் டத்துக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு வந்தது. இந்த முறைதான் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பால் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை, அரசு வேளாண்மை கல்லூரி, சிறுதானிய மகத்துவ மையம், புதிய வட்டங் கள் தொடங்கப்பட்டது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்றன. அதுபோன்ற பணிகள் மீண்டும் தொடர, திருவண்ணாமலை மாவட் டத்துக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தால், கோரிக்கை களை வலுவாக எடுத்துரைக்கலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x