

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகளில் தோல்வியடைய நான் காரணமல்ல என்று அங்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்தி.திருமாவளவன் கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் தொகு தியில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா அணி சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் என்.முருகுராமனும், திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னமும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 48 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்ற திருமாவள வன், அதிமுக வேட்பாளர் முருகு மாறனிடம் 87 வாக்குகள் வித்தி யாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார்.
காட்டுமன்னார்கோவில் தொகு தியில் தி.திருமாவளவன் என்னும் சுயேச்சையும் போட்டியிட்டிருந் தார். அவர் 289 வாக்குகளை பெற் றுள்ளார். திருமாவளவனுக்கு சேர வேண்டிய வாக்குகளை அவர் பிரித்துள்ளார் என்று பரவலாக பேசப்படுகிறது.
இது தொடர்பாக சுயேச்சை யாக போட்டியிட்ட தி.திருமா வளவனிடம் கேட்டபோது, ‘‘விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகு தியில் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்பே நான் பணிகளை தொடங்கிவிட்டேன். யாருடைய தூண்டுதலின் பேரிலேயோதான் நான் தேர்தலில் நின்றேன் என்பது உண்மையல்ல. திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. இதன் காரணத்தால் நான் வாக்கு சேகரிப்பு பணியிலேயே ஈடுபடவில்லை. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன்” என்றார்.