

தேர்தல் நாளான இன்று சம்பளத்து டன் கூடிய விடுமுறை அளிக்கா விட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் மீது புகார் அளிக்கலாம் என தொழிலாளர் ஆணையரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் ஆணையரகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் மே 16-ம் தேதி (இன்று) நடக்க வுள்ளது. இத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வகையான நிறுவனங்க ளில் பணிபுரியும் பணியாளர் களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135 பி-ன்படி தேர்தல் நாளான மே 16-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிப் பது தொடர்பாக புகார்கள் தெரி விக்க ஏதுவாக மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை கள் தொழிலாளர் துறையால் தொடங்கப்பட்டு, அதன் விபரம் www.labour.tn.gov.in மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங் களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் துணை ஆணையர் -1, மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் அளிக்கலாம். 9445398801, 94454 81440, 9445398695, 9445398694, 9840746465, 9488967339, 044-24335107 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.