

இடதுசாரி முன்னணி வேட்பாளர், கள்ள ஓட்டு போடுவதற்காக தமிழகத்திலிருந்து வாக்காளர்களை அழைத்து வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதால் இரு கட்சித் தொண்டர்களி டையே மோதல் ஏற்பட்டது.
கேரள சட்டப்பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. உடும்பசோலா தொகுதியில் இட துசாரி முன்னணி சார்பில் எம்.எம். மணி போட்டியிடுகிறார். இந்நிலை யில், மணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி யினர் இடுக்கி மாவட்ட ஆட்சிய ரிடமும் போலீஸாரிடமும் நேற்று காலையில் புகார் செய்தனர்.
அதில், தமிழகத்திலிருந்து பல வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து கேரள எல்லைக்குள் வருவதாகவும், அவர்கள் இடதுசாரி முன்னணிக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டி ருந்தது.
இதையடுத்து, தமிழகத்தி லிருந்து நுழைய முயன்ற வாகனங் களை சோதனைச்சாவடி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த வாகனங்களை அனுமதிக்குமாறு இடதுசாரி முன்னணியினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக போலீஸாருடன் அவர்கள் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும் இடதுசாரி முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, அனைத்து வாகனங்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்துமாறு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உத்தரவிட்டது.