

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதி யில் 17 வேட்பாளர்களும் குறைந்த பட்சமாக காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதியில் 10 வேட் பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டோ சின்னம் உள்பட 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் படமும் உள்ளது.
புவனகிரி தவிர்த்து மற்ற தொகுதிகளில் ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியக்கூடிய வசதி கடலூர் சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.