Published : 13 Jul 2022 06:39 AM
Last Updated : 13 Jul 2022 06:39 AM

பொதுக்குழுவுக்கு வந்தபோது விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் நிதி: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் குடும்ப நலநிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுகபொதுக்குழு கூட்டத்துக்கு வேனில் வந்தபோது, எதிர்பாராத சாலை விபத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த நிர்வாகிகள் பி.அண்ணாமலை, எஸ்.பரசுராமன் ஆகியோர் உயிர்இழந்துள்ளனர்.

5 பேர் படுகாயம்

மேலும் கே.துரை, எஸ்.சரவணன், என்.பெருமாள், பி.ரவி,எஸ்.தங்கராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தும், ராமச்சந்திரன், எஸ்.மோகன், ஜி.வேதபுரி ஆகியோர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து துயரமும், மனவேதனையும் அடைகிறேன்.

இந்த விபத்தில் மரணமடைந்த அண்ணாமலை, பரசுராமன் ஆகியோரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக தலா ரூ.7 லட்சம் வழங்கப்படும்.

படுகாயமடைந்த 5 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தலாரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சையில் உள்ள 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x