

ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார் பேட்டையில் தமிழ்நாடு பார்வை யற்றோர் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் பார்வையற்றோர் 30 பேர் தங்கி, தொழில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கென அங்கு சிறப்பு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதில் 30 பேரும் வாக்களித்தனர்.
அவர்கள் வேட்பாளர்களின் பெயர்களை படித்து தெரிந்து கொள்ளும் விதமாக பிரெய்லி முறையில் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து வழங்கியிருந்தது. அதை படித்தபின், ஏற்கெனவே வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை படித்து வாக்களித்தனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் துணைத் தலைவர் இ.ராஜேஸ்வரி கூறும்போது, ‘‘இதற்கு முன்பு இங்குள்ள பார்வையற்றோர், சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்து வந்தனர். அங்கு அவர்களை அழைத்துச் செல்வது மிகுந்த சிரம மாக இருந்தது. அங்கு பிரெய்லி முறை வேட்பாளர்கள் பட்டியலும் வழங்கப்படவில்லை. எனவே அனைவரும் வாக்களிக் கும் வரை மற்றவர்களும் காத் திருக்க வேண்டியிருந்தது.
தற்போது பார்வையற்றோருக் கென, எங்கள் சங்க வளாகத் திலேயே தனி வாக்குச் சாவடி அமைத்து, பிரெய்லி முறையில் வேட்பாளர் பட்டியலையும் வழங்கி யிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற வசதி கோரி நாங்கள் யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. தேர்தல் ஆணை யமே எங்கள் சிரமம் அறிந்து, இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள் ளது. அதற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.