Published : 12 Jul 2022 12:54 PM
Last Updated : 12 Jul 2022 12:54 PM

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 2 அரங்கில் போட்டிகளில் நடைபெறுவதால் தனித் தனியார் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. முதல் இடத்திற்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தில் ரூ.200 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் https://tickets.aicf.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x