Published : 12 Jul 2022 12:02 PM
Last Updated : 12 Jul 2022 12:02 PM
சென்னை: திராவிடம் தொடர்பான ஆளுநர் பேச்சு திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
'திராவிடர்' என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்றும், திராவிடன் என்பது மரபினம் அல்ல, நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.
திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம்சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா?ஆர்எஸ்எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.
திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.@TNGovernor #RNRavi pic.twitter.com/egp33YQi34— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 11, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT