Published : 14 May 2016 08:27 AM
Last Updated : 14 May 2016 08:27 AM

தமிழகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கனமழை பெய்தாலும் தடங்கலின்றி நடக்கும்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கனமழை பெய்தாலும் வாக்குப் பதிவு தடங்கலின்றி நடக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி (நாளை மறுநாள்) நடக் கிற து. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்த லுக்கு தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளையும் தேர்தல் துறை செய்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் 3.30 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல், வாக்குப்பதிவு ஒத்திகை, இயந்திரத்தை இயக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. யாருக்கு வாக்களித் தோம் என்பதை தெரிந்து கொள் ளும் ஒப்புகைச்சீட்டு வசதி யுள்ள மின்னணு இயந்திரங்கள் தமிழகத்தில் 17 தொகுதிகளில் பயன்படுத் தப்படுகின்றன. இது தொடர்பா கவும் அலுவலர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது.

தொகுதிவாரியாக வாக்குப் ப திவு இயந்திரங்கள், கட்டுப் பாட் டு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் ஒட்டும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. தொகுதிகளில் வாக் காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்கும் நட வடிக்கைகளிலும் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

86 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகத்தில் 86.44 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. வாக்கா ளர்கள் பூத் சிலிப் கிடைக்கா விட்டாலும், மற்ற ஆவணங் களைப் பயன்படுத் தி வாக்களிக் கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், பணப் பதுக்கலை கண்டுபிடிக்கவும் 7,600 பறக்கும் படைகள் மற்றும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சோதனையில் ரூ.1.43 கோடி சிக்கி யது. இதுவரை மொத்தம் ரூ.102 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. தொடர்ந்து சோ தனைகள் நடந்து வருகின்றன.

பணம் கொடுத்த 18 பேர் கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசத் தில் பொம்மை மின்னணு இயந் திரம் பிடிபட்டது. புதுச்சேரியில் தயாரித்து கொண்டு வரப்பட்ட 50 இயந்திரங்கள், கட்சி போஸ்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றுக்கு அனுமதி பெறவில்லை என்பதால் பறிமு தல் செய்யப்பட்டது. இதுவரை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தாக 18 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தற்போது பதற்ற மான வாக்குச்சாவடிகள் எண் ணிக்கை 9,360-ல் இருந்து 6,300 ஆக குறைந்துள்ளது. அதிக செல வினம் கொண்ட 25 தொகுதிகள் கண்டறியப்பட்டு சோதனை தீவிரப் படுத் தப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக மின்தடை ஏற்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதுகுறித்து மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு, அவர்க ளும் விளக்கம் அளித்துள்ளனர். 16-ம் தேதி வாக்குப்பதிவு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக தேர்தலை நடத்துவதற் கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 66,001 கட்டுப் பாட் டு இயந்திரங்கள், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 மின்னணு இயந் திரங்கள் உள்ளன. இயந்திரங்கள் பழுதானால் சமாளிப்பதற்காக, கூ டுதலாக 6,600 கட்டுப்பாட்டு இயந் திரங்கள், 72 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் கையிருப்பில் வைக் கப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி 15-ம் தேதி (நாளை) நடக்கிறது. அது முடிந்த தும், தேர்தல் அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கி ஆணை வழங்கப் படும். அதுமுதல், மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட் களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கும்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. கடலோர மாவட்டங் கள் மற்றும் மழை இருக்கும் என கணிக்கப்பட்ட இடங்களில் மின்னணு இயந்திரங்களுக்கு தேவையான பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாக்கா ளர்களுக்கு தேவையான ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளன. கனமழை பெய்தாலும் பாதிப்பின்றி தேர்தல் நடக்கும்.

வாக்குப்பதிவு ஒத்திகை

வாக்குப்பதிவு நாளன்று காலை பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு ஒத்திகை நடக்கும். யாருக்கு வாக்களித்தோம் என்று பார்க்கும் ஒப்புகைச்சீட்டு வசதி கொண்ட மின்னணு இயந்திரங்க ளில் ஒத்திகை பார்க்கும்போது, அந்த ஒப்புகைச்சீட்டு பதிவுகளை அகற்றிவிட்டு, இயந்திரத்தை மூட வேண்டும். இதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர், பூத் ஏஜென்ட்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எண்ணிக்கையின்போது குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x