Published : 15 May 2016 09:45 AM
Last Updated : 15 May 2016 09:45 AM

சென்னையில் நிறைவு நாளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

சென்னையில் வாக்கு சேகரிப்பு நிறைவு நாளான நேற்று அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மாலை 6 மணிக்கு பிரச்சாரத்தை முடித்தனர்.

ராயபுரம், துறைமுகம்

ராயபுரம் தொகுதி வேட்பாளர்கள் டி.ஜெயக்குமார் (அதிமுக), மனோ (காங்கிரஸ்), பிஜூ சாக்கோ (தமாகா) மற்றும் துறைமுகம் தொகுதி வேட்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன் (அதிமுக), பி.கே.சேகர்பாபு (திமுக), முராத்புகாரி (மதிமுக) என அனைத்து வேட்பாளர்களும் காலை முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாது, அந்தந்த கட்சிகள் சார்பில் சிறு குழுக்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம்

இந்த தொகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் மேள தாளத்துடன், ஆடிப்பாடி உற்சாகத்துடன் வாக்கு சேகரித்தனர். நேற்று காலை 6 மணிக்கே வாக்கு சேகரிப்பைத் தொடங்கி விட்டனர். சிறிதுநேரம் மட்டும் உணவு இடை வேளைவிட்டு இடைவிடாது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சியினரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. மேள தாளம், ஆட்டம் பாட்டம் என முக்கிய அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அமர்க்களப்பட்டது.

ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் அம்பிகாபதி, வாக்காளர்களின் மனதில் தங்களது கட்சியின் சின்னத்தை பதிய வைப்பதற்காக, குறுகிய சந்து, தெருக்களில் கூட வாகனங்களில் சென்று கட்சியின் சின்னத்தை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர். அதிமுக வேட்பாளர் ப.வளர் மதிக்கு ஓட்டுக் கேட்டு தலா 20 பேர் கொண்ட 10-க்கும் அதிகமான குழுக்கள், தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தன.

அண்ணா நகர்

அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், மதிமுக வேட்பாளர் மல்லிகா தயாளன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதா ஆகியோர் நேற்று காலை 9 மணிக்கு முன்னதாகவே பிரச்சாரத்தை தொடங்கினர். இது அமைச்சர்களை உருவாக்கிய தொகுதி என்பதால் வெற்றி பெரும் முனைப்பில் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொகுதி முழுவதும் வேட்பாளர்களும், அவரது ஆதரவாளர் களும் பிரச்சாரம் செய்தனர்.

விருகம்பாக்கம்

இந்த தொகுதியில் வேட்பாளர் கள் வி.என்.ரவி (அ.தி.மு.க), கே.தனசேகரன் (தி.மு.க), பி.பார்த்த சாரதி (தே.மு.தி.க), சி.ஹெச்.ஜெயராவ் (பா.ம.க), தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க) ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டை

இந்த தொகுதியில் சி.பொன்னை யன் (அதிமுக), மா.சுப்பிரமணியன் (திமுக), எஸ்.ஏழுமலை (இந்திய கம்யூ.) உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி நாள் பிரச்சாரத்தில் களத்தில் இருந்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தியாகராய நகர்

சென்னை தியாகராய நகர் வேட்பாளர்கள் என்.எஸ்.கனிமொழி (திமுக) தி.நகர் சத்யா (அதிமுக) ஹெச்.ராஜா (பாஜக) குமார் (தேமுதிக), வினோத் (பாமக) ஆகியோர் நேற்று வீடு வீடாகவும், திறந்த ஜீப்பீல் சென்றும், தொகுதி முழுவதும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மயிலாப்பூர்

மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே தியாகராஜன் (காங்கிரஸ்), ஆர்.நடராஜ் (அதிமுக), முனவர் பாட்ஷா (தமாகா), கரு.நாகராஜன் (பாஜக) சுரேஷ்குமார் (பாமக) ஆகியோர் திறந்த ஜீப், இரு சக்கர வாகனங்கள் மூலம் இத்தனை நாட்களாக தாங்கள் வாக்குசேகரித்த அனைத்து பகுதிகளுக்கும் 2-வது முறையாக சென்று நேற்றும் வாக்கு சேகரித்தனர்.

வேளச்சேரி

வேளச்சேரி தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் சி.முனுசாமி (அதிமுக), வாகை சந்திரசேகர் (திமுக), வி.என்.ராஜன் (தேமுதிக - மந கூட்டணி) என்.வினோபா பூபதி (பாமக), பி.தரன் (பாஜக), என்.சந்திரசேகரன் (நாம் தமிழர்) ஆகியோர் நேற்று நிறைவுநாள் என்பதால் காலை 6 மணிக்கே பிரச்சாரத்தைத் தொடங்கி, இடை விடாமல் மாலை 6 மணி வரை தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களுக்கு தண்ணீர், மோர், இளநீர் போன்ற வற்றை பொதுமக்களே வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x