

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவ கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை அமல் படுத்தியிருப்பது ஏழை, கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இழைக் கப்பட்ட மிகப்பெரிய அநீதி. தேர் தல் நேரத்தில் இப்படியொரு நெருக்கடியை நீதிமன்றம் மூலம் உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்ட வசமானது. இதன் பின்னணியில் பாஜக இருக்கலாம் என்று கருது கிறோம். இதுதொடர்பாக இனியும் நீதிமன்றங் களை நாடுவதால் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, நாடாளுமன்றம் மூலம் சட்டமியற்றித்தான் இதற்கு தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தியும், பொது நுழைவுத் தேர்வு முறையைக் கண்டித்தும் சென்னையில் வரும் 7-ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு திமுக தன் ஆதரவை தெரிவித்துவிட்டது. அதிமுக-வும், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு நாடாளுமன் றத்தில் அழுத்தம் கொடுக்க வேண் டும். இதர கட்சிகளும் இதில் இணைய வேண்டும் என்றார்.