

திருவொற்றியூர் தொகுதிகளின் பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
இந்த தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி. திமுக, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நல்ல கட்சி, நாணயமான கட்சி, வித்தியாசமான கட்சி வரவேண்டும் என இதுவரை மக்கள் காத்திருந்தார்கள். தற்போது, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக வந்திருக்கிறது. எங்கள் முதலமைச்சர் வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம் என மக்கள் பேசி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பாமக 202 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த எண்ணிக்கை வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உயர்ந்து, தமிழகத்தில் 14 தொகுதிகளில் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும். நான் போடும் கணக்கு எப்பவும் தப்பாகாது என்று அவர் பேசினார்.