

நம் நாட்டில் கருத்துக் கணிப்பு களின் அடிப்படையில் ஆட்சி அமைந்ததாக சரித்திரம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல், லஞ்சம் நிறைந்த திமுக, அதிமுக வுக்கு மாற்றான ஆட்சியைத் தான் மாணவர்கள், புதிய வாக் காளர்கள், கட்சி சார்பற்றவர்கள் விரும்புகிறார்கள்.
அதற்கேற்ப பலமான அணியாக தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி மட்டுமே இருப்பதாக மக்கள் கருதுவதால் அதை ஏற்க முடியாமல் பணத்தால் தங் களுக்குச் சாதகமாக திமுக, அதிமுகவினர் கருத்துக் கணிப்பை உருவாக்கி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் 1971-ல் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெல்லும் என்ற கருத்துக் கணிப்பை பொய்யாக்கும் வகையில் அந்த தேர்தலில் திமுக வென்றது. பிஹாரில் நிதிஷ்குமார், டெல்லி யில் அர்விந்த கேஜரிவால் ஆகி யோர் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெற்றனர். இதுவரை நம் நாட்டில் கருத்துக் கணிப்புகளின்படி ஆட்சி அமைந்ததாக சரித்திரம் இல்லை. ஆகவே, இம்முறையும் கருத்துக் கணிப்பு எடுபடாது.