

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வூட்டும் வகையில், சமூக வலைதளமான ட்விட்டரில் புது முயற்சியை மேற்கொண்டு வருகிறது தமிழக தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 25.2% வாக்குப்பதிவாகி இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பில் இருந்தே #TN100Percent என்ற ஹேஷ்டேக்கில் அனைவருக்கு வாக்களிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. தேர்தல் நாளை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் இருப்பவர்களைக் குறிப்பிட்டு "இன்று வாக்களித்துவிட்டு, #IVotedTN அல்லது #வாக்களித்தேன் என்ற டேக்கில் ட்வீட் செய்யுங்கள். உங்களுக்கு பிரபலத்தின் டிஜிட்டல் கையெழுத்து காத்திருக்கிறது" என்று கூறி வருகிறது.
அவ்வாறு வாக்களித்துவிட்டு ட்வீட் செய்பவர்களுக்கு அஸ்வின், தீபிகா பல்லிகல் உள்ளிட்ட பிரபலங்களில் டிஜிட்டல் கையெழுத்தை ட்விட்டர் தளத்தில் அனுப்பி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி ட்விட்டர் தளத்தில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.